திருமண நாள் எப்படி குறிக்க வேண்டும்?

ஆன்மிகம் என்பது முக்திக்கான வழி என்று மட்டுமேநாம் கருதிக்கொண்டிருக்கிற ோம். அதனால், வாழும் வரை வாழ்ந்துவிட்டு, “வயதான காலத்தில் ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். இப்பொழுது என்னஅவசரம்?” என்று நினைக்கிறோம். ஆனால், வாழ்வதற்கான பொருளைச் சொல்வது ஆன்மிகம். நம்முடைய சாஸ்திரங்களும், புராண இதிகாசக் கதைகளும் முக்திக்கான வழியைமட்டும் காட்டவில்லை. வாழும்போது பின்பற்றவேண்டிய வழிமுறைகளைப் பற்றியும் போதிக்கின்றன. அதில் ஒன்றுதான் சடங்குகளைப் பற்றிய குறிப்புகள். சீதை – ராமன் கல்யாண தேதியை நிச்சயிக்கவேண்டும். விஸ்வாமித்திர முனிவரிடம் தசரதன் கேட்கின்றார். விஸ்வாமித்திரர் சொல்கிறார்.“ஏன், நாளை நல்ல நாள்தானே?” என்று, அடுத்த நாளே முகூர்த்தத்தைவைத்துக் க ொள்ளலாம் என்கிறார். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமானவிஷயம் உண்டு. சுப காரியங்களை எவ்வளவு விரைவாக முடிக்க வேண்டுமோஅவ்வளவு விரைவாக முடிக்கவேண்டும். அதனால்தான் ஆண்டாள் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு நாள் குறிப்பதைதள்ளி வைக்கவேண்டாம், அடுத்தமுகூர்த்தமே வைப்பது சிறந்தது.

“நாளைவ துவைம ணமென்று நாளிட்டுபாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பான் ஓர்காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீ நான்’’

இது கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது “ச்ரேயாம்ஸி பஹு விக்நாநி’’ என்றபடி நற்காரியங்களுக்கு இடையூறுகள்வரும் என்பதால், விவாஹ மஹோத்ஸவத்துக்கு உடனடி நாள் தேர்ந்தெடுக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் நான்கு ஆசிரமங்கள் (நிலைகள்) உண்டு என்று சாஸ்திரம் வரையறைசெய்கிறது. நான்கு ஆசிரமங்களில், கல்வி கற்க வேண்டிய காலம் பிரம்மச்சரிய காலம். ஆனால், இப்பொழுது கல்வி கற்பதற்கே 30 ஆண்டு களுக்கு மேல் எடுத்துக் கொள்கின்றார்கள். அதற்குப் பிறகு உத்தியோகத்துக்கு சென்று திருமணத்திற்கு யோசனைசெய்யவே இன்னும் ஐந்து ஆறு வருடங்கள் எடுத்துக் கொள்கின்றார்கள். அதற்குப் பிறகு திருமணம் நிச்சயிக்க ஆண்டு கணக்கில் எடுத்துக்கொள்கின்றார்கள். நிச்சயதார்த்தம் முடிந்து, “அடுத்தவருடம்தான் திருமணம்” என்று காலத்தை தள்ளிப் போடும் பொழுது, அந்த நிகழ்ச்சியை நல் லபடியாக அனுமதிக்க காலம் ஒத்துழைப்பதில்லை. காலத்தை நம் கையில் எடுத்துக்க கொள்ள வேண்டும் என்று நினைத்தால், காலம் தன் கையில் நம்மை எடுத்துக் க கொண்டு, நமக்கு ஏமாற்றம் தருகின்றது. அதனால்தான் இன்னும் தாமதம் ஏன் என்று உடனடியாக நாள் குறித்துக் க கொடுக்கின்றார் விஸ்வாமித்திர முனிவர்.

“வாளை உகள கயல்கள் வாவி படிமேதி மூளை முதுபாளை விரியகைக்க் குதி கதுவ மூரிய வரால் மீன் கொள் பண்ணை தேஜஸ்வி வள நாடா நாளை என உற்ற பகல் நல் தவன் உரைத்தான்’’

ராம அவதார நோக்கம் நல்லபடி தாமதமின்றி நிறைவேறினால், உலகத்துக்கு நன்மை கிடைக்கும் என்பது விஸ்வாமித்திரர் எண்ணம். அதன் முதல்காரியம், இந்த திருமணம் நடைபெற வேண்டும். விஸ்வாமித்திரர், உலக நண்பர் ஆயிற்றே. (விஸ்வம் – உலகம்; மித்ரன் – நண்பர்). அதனால் அவசரமாக மறுநாள் நல்ல நாள் என்கிறார். இதில் இன்னொரு விஷயமும் உண்டு. ராமர் திருமணம், பெண் வீடான ஜனகர் இல்லத்தில் நடைபெறுகிறது. பெரும்பாலான திருமணங்கள்பெண் வீட்டில்தான் நடக்கிறது. இதுவும் புராண இதிகாசக் குறிப்புகளில் இருந்து நாம் தெரிந்து க கொள்ளலாம் .

வள்ளி திருமணம் ஆகட்டும், பத்மாவதி திருமணமாகட்டும், சீதை கல்யாணமாகட்டும், எல்லாம் மணப்பெண் ஊரில்தான்.மணப் பெண்ணுக்கு அது மனரீதியாக சிலசௌகரியங்களைத்தருகிறது என்பது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அடுத்த விஷயம், பெண்களுக்குள்ள உரிமை. பழைய காலத்தில், ஒரு பெண், தன் திருமணத்திற்காக வரனை தேர்ந்தெடுக்கும் உரிமை இல்லை. பெற்றோர்களால் நிர்ப்பந்திக்கப்படுகிறாள் என்றெல்லாம் சொல்கின்றார்கள். ஆனால், புராண இதிகாசக் கதைகளைப் பார்க்கின்றபொழுது, பெண்ணின் உணர்வுகளுக்கு அதிக மதிப்பு தந்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பாற்கடலைக் கடைந்த போது அமுதத்தோடு வெளிப்பட்ட மகாலட்சுமித் தாயார், அங்கே இருக்கக் கூடிய அத்தனைத்தேவர்களையும் பார்த்துக் க கொண்டு , கடல் அரசன் அனுமதியோடு, மகாவிஷ்ணுவின் கரம் பிடிக்கிறாள்.அதைப் போலவே, ராமனை முதல்முதலில் பார்த்தவுடன், “இவர்தான் தன்னுடைய மணாளன்’’ என்று சீதையின் மனம் நிச்சயத்துவிடுகிறது. வேறு யாராவது வில்லொடித்துவிட்டால்என்ன செய்வது என்று மனம் பதைபதைக்கிறது. ஆனால், வில்லொடித்தவன் ராமன்தான் என்று தெரிந்த பிறகு, அவள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேஇல்லை. மாலையைச் சூடுவதற்காகஅவள் மணமண்டபம் அடைந்தகாட்சி எத்தனை அழகாக இருந்தது என்பதைகம்பன் வர்ணிக்கின்றார்.

“பொன்னின் ஒளி பூவின் வெறி
சாந்து பொதி சீதம்
மின்னின் எழில் அன்னவள்தன்
மேனி ஒளி மான
அன்னமும் அரம்பையரும்
ஆர் அமிழ்தும் நாண
மன் அவை இருந்த மணி
மண்டபம் அடைந்தாள்.’’

இந்த மங்கலப் பாடலை இப்பொழுதும் திருமணம் நடக்கும் பொழுது அல்லது ஊஞ்சலின்போது பாடுபவர்கள் உண்டு. கன்னியாதானம் செய்கின்றபொழுது, ஒரு ஸ்லோகம் வால்மீகியில் உண்டு. அந்த ஸ்லோகத்தை இப்பொழுதும் கன்னியாதானம் செய்யும் பொழுது சில புரோகிதர்கள்சொல்வதுண்டு. அந்தஸ்லோகம் இதுதான்.

“இயம் சீதா மம சுதா ஸஹதர்மசரீ தவ!
ப்ரதீச்ச சைநாம் பத்ரந்தே பாணீம்,
க்ருண் ஹீஷ்வ பாணிநா”

– பாலகாண்டம், வால்மீகி ராமாயணம். (இவள் என் மகள் சீதை; இவளை உன் மனைவியாக ஏற்பாயாக; இவள்கையை உன் கைகளால் பற்றுவாயாக; இவள் உன்னை நிழல்போலத்தொடர்ந்துவரட்டும்”) இதற்கு பெரியவாச்சான் பிள்ளை, ராமாயண தனி ஸ்லோகவிவரணத்தில். அற்புதமான அர்த்தவிசேஷங்களைச் சொல்லியிருக்கிறார்.மிதிலையில் ராமனுக்கு மட்டும் திருமணம் நடக்கவில்லை. ராமருடன் பிறந்த லட்சுமணன் (ஊர்மிளை), பரதன் (மாண்டவி), சத்ருக்கனனுக்கும் (ஸ்ருதகீர்த்தி), திருமணம் நடைபெறுகின்றது. திருமணம் முடிந்து மிகமிகமகிழ்ச்சியாக அயோத்திக்குத் திரும்புகின்றபொழுதுதான், ஒரு அதிர்ச்சியானசெய்தி தசரதனை அடைகிறது.“21 தலைமுறை சத்திரியர்களை வேரறுப்பேன்’’ என்று சபத மேற்றுத் திரிகின்ற பரசுராமன் வரும் செய்திதான் அது.பல அரசர்களைக் க கொன்றுகுவித்து , அந்தரத்தத்தால் “சமந்த பஞ்சகம்’’ என்று ஒரு மடுவை ஏற்படுத்தி தன்னுடைய தந்தைக்கு நீத்தார் கடனை நிறைவேற்றியவன் பரசுராமன். அவன் மிகுந்தக கோபத்தோடு வந்து கொண்டிருக்கிறான் என்கின்றசெய்தி தசரதனை அடைகிறது. பத்து திசைகளையும் வென்ற தசரதன், இப்பொழுது மனம் நடுங்குகின்றான்.

தேஜஸ்வி

Related posts

பாண்டுரங்கன் வருகை

வாஸ்து நாள் என்றால் என்ன?

திருவல்லிக்கேணியும் திருவீதிஉலாவும்