மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து..!!

டெல்லி: மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்டு இதுவரை 157 பேர் உயிரிழந்துள்ளனர். 157 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டு 216 பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 130க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 500 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் 400 குடும்பங்கள் சிக்கித் தவித்து வருகின்றன. இந்நிலையில் நிலச்சரிவு பாதிப்புகளை பார்வையிட இன்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பயணம் செல்வதாக இருந்தது. ஆனால் தொடர் மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் தரையிறங்குவதில் சிக்கல் நிலவும் என்பதால் பிரியங்கா காந்தியும், ராகுல்காந்தியும் இன்று வயநாடு பயணம் செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது குறித்து,

ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் கூறுகையில்,

வயநாடு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. தற்போது நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாகவும், விரைவில் வயநாடு வருகை தருவதாக ராகுல்காந்தி உறுதி அளித்துள்ளார். இந்த இக்கட்டான நேரத்தில் எங்கள் எண்ணங்கள் வயநாடு மக்களுடன் உள்ளன. வயநாடு மக்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

 

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது