செல்வப்பெருந்தகை விமர்சனம்; வஞ்சக புத்தி கொண்ட மோடிக்கு மனம் ஒன்றிய தியானம் என்றும் கிட்டாது

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கை: இறுதிகட்ட தேர்தல் நடைபெறும் 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. குஜராத் மாநில முதலமைச்சராக மோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டபோது, கண்டும் காணாமல் இருந்தார். அதிகாரவெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சகப்புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது.

ஆன்மிக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட மோடி, ஆன்மிக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம். இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மிக நோக்கம் கொண்டதல்ல. விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் மோடி தியானம் மேற்கொள்ளும் 3 நாட்களும் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. மோடியின் தியான நடவடிக்கைக்குத் தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்