வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு ரூ.7 லட்சத்தில் நவீன கருவிகள்: நீலகிரி திமுகவினர் வழங்கினர்

ஊட்டி: வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 வகையான நவீன இயந்திர பொருட்கள் நீலகிரி திமுக., சார்பில் வழங்கப்பட்டது.கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 260க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காணாமல் போன பலரையும் இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட திமுக., சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான மீட்பு நவீன உபகரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட திமுக., செயலாளர் முபாரக் தலைமையில் திமுக., நிர்வாகிகள் குன்னூர் ஆர்டிஓ., சதீஷ்குமாரிடம் உபகரணங்களை வழங்கினர்.முதல் கட்டமாக மீட்பு பணிக்கு தேவையான கேஸ் கட்டர், கான்கிரீட் உடைக்கும் நவீன இயந்திரங்கள், ஸ்டிரெக்ச்சர்கள், பணிகளில் ஈடுபடுவோருக்கான தேவையான பாதுகாப்பு உடைகள், காலணிகள், முக கவசம், சேனிடைசர், இரவு நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபட எல்இடி லைட்டுகள் உட்பட 12 வகையான பொருட்களை கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், திமுக மாவட்ட அவைத்தலைவர் போஜன், நகர செயலாளர் ராமசாமி, நகராட்சி துணை தலைவர் வாசிம்ராஜா, ஒன்றிய செயலாளர் பிரேம்குமார், லாரன்ஸ், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான், பொதுக்குழு உறுப்பினர்கள் சதக்கத்துல்லா, காளிதாஸ், செல்வம், ஒன்றிய செயலாளர் பிரேம், இளைஞரணி அமைப்பாளர் பத்மநாபன், காளிதாஸ், நகர் மன்ற உறுப்பினர்கள் மணிகண்டன், மன்சூர், ராபர்ட், குமரேசன், ஆரோக்கியதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!