வயநாடு நிலச்சரிவு.. இறந்தோர் குடும்பங்களுக்கு ரூ.6 லட்சம் நிதியுதவி: கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு!!

திருவனந்தபுரம்: வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.6 லட்சம் வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. வயநாட்டில் முண்டைக்கை, சூரல்மலை, வேப்படி ஆகிய மலை கிராமங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலச்சரிவில் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலரும் காணாமல் போயுள்ளனர். நிலச்சரிவில் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கேரள அமைச்சரவைக் கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர் சந்தித்த பினராயில் விஜயன் நிவாரணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து பினராயி விஜயன் பேசியதாவது; வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.6 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். 60 சதவிகிதத்துக்கு மேல் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ.75,000, 40 – 50 சதவிகிதம் உடலில் குறைபாடு ஏற்பட்டவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் படுகாயமடைந்தவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 வழங்கப்படும்.

வீடுகளை இழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களுக்கு மாதம் ரூ.6,000 வாடகை உதவித் தொகையாக வழங்கப்படும். இந்த நிவாரணங்கள் முதல்வரின் பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்யப்படும். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச தங்கும் இடங்களை அரசு ஏற்படுத்தியுள்ளது.

அந்த இடங்களில் தங்க வாடகை வசூலிக்கப்படாது. கல்வி சான்றிதழ், அரசு அடையாள அட்டைகள் உள்ளிட்டவை மீண்டும் வழங்க அனைத்து துறைகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. வாரிசு சான்றிதழ் இல்லாமல் இழப்பீட்டு தொகையை பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் குறித்த விவரங்கள் விரைவில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்

பிரதமர் மோடி இன்று அமெரிக்கா புறப்பட்டு சென்றார்; ‘குவாட்’ உச்சி மாநாட்டை கண்டு சீனா அஞ்சுவது ஏன்?.. வல்லரசு நாடுகளுடன் இந்தியா கைகோர்த்ததால் தலைவலி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, மயிலாடுதுறையைச் சேர்ந்த 37 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை