தர்பூசணி வாங்கப் போறீங்களா? அப்ப இதெல்லாம் கவனிங்க…

நன்றி குங்குமம் தோழி

தர்பூசணி நீர்ச்சத்து, சுவையான சதை காரணமாக, உலகெங்கிலும் உள்ள பலரால் விரும்பப்படும் ஒரு கோடைகால பழமாகும். இருப்பினும், சரியான தர்பூசணியைத் தேர்ந்தெடுப்பது என்பது கொஞ்சம் கடினம் என்றுதான் சொல்ல வேண்டும். பழுத்த மற்றும் மிகவும் சுவையான தர்பூசணியை எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று தெரிந்து கொள்ளலாம்.

*ஒரு தர்பூசணியைத் தேர்ந்தெடுக்கும் போது, சீரான வடிவம் மற்றும் சமச்சீர் தோற்றம் கொண்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். சீரற்ற வடிவம் சேதமடைந்த அல்லது முறையற்ற வளரும் நிலைமைகளைக் குறிக்கலாம். அந்தப் பழம் சுவையாக இருக்காது.

*பழுத்த தர்பூசணி பொதுவாக அடர் பச்சை நிறத்தில் அடர்ந்த கோடுகள் அல்லது புள்ளிகளுடன் இருக்கும். வெளிறிய அல்லது மென்மையான புள்ளிகளைக் கொண்ட தர்பூசணிகளைத் தவிர்க்கவும். அது விரைவில் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.

*உள்ளங்கையால் தர்பூசணியை நன்றாக தட்டிப் பார்க்கவும். ஆழமான, வெற்று ஒலி கேட்டால் அது நல்ல பழம். பழுத்த தர்பூசணி எதிரொலிக்கும், டிரம் போன்ற ஒலியை உருவாக்கும். இது சாறு நிறைந்தது மற்றும் சுவைக்கத் தயாராக உள்ளது என்பதைக் குறிக்கும்.

*பழுத்த பழம் கனமாக இருக்கும். காரணம், அதில் அதிக அளவு நீர் நிறைந்திருக்கும். கனமான தர்பூசணிகள் பொதுவாக ஜூசியாகவும் அதிக சுவையுடனும் இருக்கும்.

*தர்பூசணியின் அடிப்பகுதியை ஆய்வு செய்ய வேண்டும். தர்பூசணி செடி என்பதால் அது மண் தரையில்தான் படர்ந்து வளரும். அதனால் ‘ஃபீல்ட் ஸ்பாட்’ என்று குறிப்பிடக்கூடிய மஞ்சள் நிறப் புள்ளி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். முழுமையாக பழுத்த தர்பூசணியில் தங்க-மஞ்சள் புள்ளி இருக்கும்.

*சர்க்கரைப் புள்ளிகள், ‘சர்க்கரை வெப்பிங்’ என்றும் அழைக்கப்படும். இந்தப் புள்ளிகள் தர்பூசணியின் மேற்பரப்பில் சிறிய பழுப்பு நிறத்தில் தென்படும். இந்தப் புள்ளிகள் பழத்தில் அதிக சர்க்கரை உள்ளடக்கம் இருப்பதையும், இனிமையாகவும், சுவையாகவும் இருக்கும் என்பதைக் குறிக்கும். சிறந்த சுவைக்கு, அதிக சர்க்கரைப்புள்ளிகளைக் கொண்ட தர்பூசணிகளைத் தேடுங்கள்.

*தர்பூசணி கோடை காலத்தில்தான் அதிகமாக விளையும். அதனால் அந்தந்த சீதோஷ்ணத்தில் கிடைக்கும் பழங்களை வாங்குங்கள். இப்போது எல்லா பழங்களும் அனைத்து சீசனிலும் கிடைக்கிறது. அப்படி வாங்காமல், அந்தந்த சீசனில் கிடைக்கக்கூடிய பழங்களை மட்டுமே வாங்கி சாப்பிடுங்கள்.

– பா.கவிதா, கோவிலாம்பூண்டி.

Related posts

கிச்சன் டிப்ஸ்

1965 மணி நேரம்…81 நாட்கள் 165 பேர் உருவாக்கிய ஆலியாபாட் சேலை

சிலம்பத்தையும் விளையாட்டுப் போட்டியாக பார்க்க வேண்டும்!