திருக்கழுக்குன்றத்தில் தொடர் மழையால் நிரம்பிவரும் நீர்நிலைகள்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில், தொடர் மழை காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. கடந்த வாரத்தில் கோடைவெயில் வாட்டி வதைத்தநிலையில், வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் மக்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், ஒரு சிலர் வீட்டை விட்டே வெளியில் வராமல் கமுடங்கிக்கிடந்தனர். திடீரென கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால், திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 97 ஏரிகளும், 105 யூனியன் ஏரி மற்றும் குளங்களும் நிரம்பிவருகின்றன. மேலும், கோடைக்காலத்தில் வறட்சியாக காணப்பட்ட பாலாற்றில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லிபுரம் மற்றும் வாயலூர் பாலாற்று தடுப்பணைகளும் நிரம்பி வருகின்றன.

Related posts

ஜூலை 07: பெட்ரோல் விலை ரூ.100.75, டீசல் விலை ரூ.92.34

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்