அடுத்த மாதம் போர் நிறுத்த உச்சி மாநாடு.. ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த சவூதி அரேபியா முயற்சி!!

ஜெட்டா : உக்ரைன் – ரஷ்யா இடையேயான போரை நிறுத்துவது தொடர்பான உச்சி மாநாடு அடுத்த மாதம் சவூதி அரேபியாவில் நடைபெற உள்ளது. உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்க போர், தற்போதும் தொடர்ந்து வருகிறது. இந்த 2 நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளதால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டு விலையும் உயர்ந்துள்ளது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பதால் போரை நிறுத்த ரஷ்யாவும் உக்ரைனும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் படி பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன.

போர் தொடங்கியது முதல் அரபு நாடுகள் நடுநிலை வகித்து வருவதால் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு உதவுமாறு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐக்கிய அரசு நாடுகளை கேட்டுக் கொண்டார். தற்போது அதற்கான ஏற்பாடுகளை சவூதி அரேபியா அரசு செய்து வருகிறது. இந்த மாநாடு செங்கடல் அருகே உள்ள துறைமுக நகரமான ஜெட்டாவில் நடைபெற உள்ளது. இதில் உக்ரைன், பிரேசில், இந்தியா உள்பட சுமார் 30 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். அமெரிக்க அதிபர் ஜோ பிடன் சார்பில் உயர்மட்ட அதிகாரி ஒருவரும் கலந்து கொள்ள உள்ளார். இதற்கான தேதி உள்ளிட்ட மற்ற விவரங்கள் குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிகிறது. ஆனால் இந்த போர் நிறுத்த மாநாட்டில் ரஷ்ய பங்கேற்குமா என்பது உறுதி செய்யப்படவில்லை.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு