வாலாஜாபாத் பகுதியில் அதிக பாரம் ஏற்றி சென்ற லாரிகளுக்கு ரூ.6.30 லட்சம் அபராதம்: அதிகாரிகள் நடவடிக்கை

வாலாஜாபாத்: காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், திருமுக்கூடல், ஆர்ப்பாக்கம், மதுர், மாகறல், இளைஞர்வேலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமப்புற பகுதிகளில் கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து கட்டுமான பணிகளுக்காக காஞ்சிபுரம், வாலாஜாபாத் செங்கல்பட்டு, ஒரகடம், ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு நகர்புற பகுதிகளுக்கு எம் சாண்ட், ஜல்லி கற்கள், மலை மண் உள்ளிட்டவைகள் கனரக லாரிகள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. இந்நிலையில் எடுத்துச் செல்லப்படும் அதிக பாரம் மற்றும் லாரிகள் முறையாக தார்ப்பாய் போர்த்தி லாரி ஓட்டுநர்கள் இயக்குவதில்லை. இதனால், இருசக்கர வாகன ஓட்டிகளில் மற்றும் சாலை ஓரம் நடந்து செல்லும் பொதுமக்கள் நாள்தோறும் சிரமப்பட்டு வந்தனர்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தநிலையில் நேற்று வாலாஜாபாத் பகுதியில் வாலாஜாபாத் தாசில்தார் கருணாகரன், காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாலாஜாபாத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் கனரக லாரிகள் மற்றும் காஞ்சிபுரத்திலிருந்து வாலாஜாபாத்தை நோக்கிச் வந்த லாரிகளை ஆய்வு செய்தனர். அதில், பெரும்பாலான லாரிகளை மடக்கி ஆய்வு செய்தனர். அதில், பத்து லாரிகளில் அதிக பாரம் ஏற்றி வந்ததும், தார்ப்பாய் இன்றி லாரியை இயக்கியதும் தெரிய வந்தது. இதனை அடுத்து, பத்துக்கும் லாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களிடமிருந்து ரூ.6.40 லட்சம் அபராதம் விதித்தனர். மேலும், லாரி உரிமையாளர்களிடமும் ஓட்டுநர்களிடமும் லாரியை இயக்கும்போது கண்டிப்பாக அதிக பாரங்கள் ஏற்றக்கூடாது மேலும் தார்ப்பாய் இன்றி செல்லக்கூடாது என அறிவுரை வழங்கினார் மேலும் இது போன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும் வருவாய் துறை அலுவலர் மற்றும் போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி