விருத்தாசலம் அருகே வனவிலங்குகளை, அரிய வகை பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய 2 பேர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே வனவிலங்குகளை அரிய வகை பறவைகளை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து, ஒரு நாட்டு துப்பாக்கி, வெடி வெடி மருந்து, உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த வனத்துறை அதிகாரிகள். கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த வண்ணாங்குடிகாடு கிராமத்தில், வனத்துறை அதிகாரிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வபோது இனபெருக்கதிற்காகவும், இரை தேடியும் வலசை வரும் வெளி மாநிலங்களில் இருந்து வரக்கூடிய, ஜொலிக்கும் அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் ஆகிய அரிய வகை பறவைகளை, துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடிய, ஸ்ரீமுஷ்ணம் பகுதியை சேர்ந்த விஜய், குமார் ஆகிய இருவரையும் வனத்துறை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, வண்ணங்குடி காடு கிராமத்தில் உள்ள இலுப்பை மரத்தோப்பில் வேட்டையாடியது தெரிய வந்தது. மேலும் வேட்டையாட பயன்படுத்தப்பட்ட நாட்டு துப்பாக்கி, இருசக்கர வாகனம், வெடி மருந்துகள் மற்றும் வேட்டையாடப்பட்ட அரியவகை பறவைகளை பறிமுதல் செய்து, இந்திய வனஉயிரின பாதுகாப்பு சட்டத்தின் படி வழக்கு பதிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

இரு அவைகளையும் ஜனாதிபதி ஒத்திவைத்த நிலையில் 23ம் தேதி ஒன்றிய பட்ஜெட் தாக்கல்?: 22ம் தேதி மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

தமிழகத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் 15ல் தொடங்கி வைக்கிறார்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு