வாக்குபதிவு இயந்திரங்கள் தொடர்பாக காங். எழுப்பிய சந்தேகங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை: தேர்தல் ஆணையம் பதில்

புதுடெல்லி: மின்னணு வாக்கு பதிவு இயந்திரம், வாக்குபதிவு ஒப்புகை சீட்டு தொடர்பாக காங்கிரஸ் எழுப்பிய சந்தேகங்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்று தேர்தல் ஆணையம் பதிலளித்துள்ளது. தலைமை தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடந்த மாதம் 30ம் தேதி எழுதிய கடிதத்தில், டிசம்பர் 19-ம் தேதி கூடிய இந்தியா கூட்டணி கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் வாக்காளர்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை மற்றும் வாக்காளர்களுக்கு வாக்கு பதிவு ஒப்புகை சீட்டு (விவிபாட்)குறித்து தலைவர்கள் பல விளக்கங்களை கேட்டனர். வாக்காளர்களிடம் வாக்கு பதிவு ஒப்புகை சீட்டு வழங்க வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பாக, தங்களை நேரில் சந்திக்க இந்தியா கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என கோரியிருந்தார். இந்நிலையில், தேர்தல் ஆணைய செயலாளர் பிரமோத் குமார் சர்மா, ஜெயராம் ரமேஷ்க்கு எழுதியுள்ள பதிலில், வாக்காளர் ஒப்புகை சீட்டுகள் தொடர்பாக எந்தவித நியாயமான சந்தேகங்களை எழுப்பவில்லை. தேர்தல்களில் மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்துவதில் தேர்தல் ஆணையத்துக்கு முழு நம்பிக்கை உள்ளது. 1961 ம் ஆண்டு தேர்தல் நடத்தை விதிகள், 49 ஏ மற்றும் 49 எம் பிரிவுகளின்படி, வாக்காளர் ஒப்புகை சீட்டு நடைமுறை கடந்த 2013ல் காங்கிரஸ் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்டது.உங்கள் கடிதத்தில் நியாயமான சந்தேகங்களை எழுப்பவில்லை.மேலும், புதிய ஆதாரங்கள் எதுவும் கொடுக்கவில்லை. இதனால், நாங்கள் புதிதாக விளக்கமளிக்க ஒன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு