40 பேருக்கு வாந்தி, மயக்கம் எதிரொலி: பிரியாணி கடைக்கு சீல்: உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

பெரம்பூர்: கொடுங்கையூர் கண்ணதாசன் நகரில் செயல்பட்டு வரும் பிரபல பிரியாணி கடையில் கடந்த திங்கட்கிழமை இரவு பிரியாணி மற்றும் சிக்கன் சாப்பிட்ட சுமார் 40க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் உடல் உபாதை ஏற்பட்டு பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று சம்பந்தப்பட்ட பிரியாணி கடைக்கு சென்று உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006 பிரிவு 32ன் படி உணவு பாதுகாப்பு குறைபாடுகளை கண்டறிந்து அவற்றை சுட்டிக்காட்டி உணவகத்தின் மேலாளருக்கு நோட்டீஸ் வழங்கினார்.

இந்த பிரியாணி கடையில் உணவு தயார் செய்யப்படுவதில்லை என்பதை கண்டறிந்து உணவு தயார் செய்யப்படும் இடமான திருவள்ளூர் மாவட்டம் அலமாதி பகுதிக்கு சென்று அங்கு இறைச்சி மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்துள்ளனர். அந்த இடத்திலிருந்து எந்தெந்த கடைகளுக்கு பிரியாணி மற்றும் இறைச்சி வகைகள் செல்கிறதோ அந்த அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதேபோல், மற்ற பகுதிகளில் உள்ள பிரியாணி கடைகளில் சாப்பிட்ட யாரேனும் உடல் உபாதைகளால் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்களா என்பது குறித்தும் விசாரணை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி