40 தொகுதிகளுக்கான நாதக வேட்பாளர்கள்: சீமான் அறிமுகம் செய்தார்

சென்னை: மக்களவைத் தேர்தலில் 40 தொதிகளில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி (நாதக) வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஒரே மேடையில் அறிமுகம் செய்து வைத்தார். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகின்றனர். இந்நிலையில் சென்னையில் நேற்று நாதக வேட்பாளர் அறிமுக பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் நாதகவின் 40 தொகுதி வேட்பாளர்களையும் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.

இதில் 20 பெண் வேட்பாளர்கள் ஆவர். கிருஷ்ணகிரி வேட்பாளராக வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுகிறார். திருவள்ளூர் ஜெகதீஷ் சந்தர், வடசென்னை அமுதினி, தென் சென்னை தமிழ்ச்செல்வி, மத்திய சென்னை கார்த்திகேயன், பெரும்புதூர் ரவிச்சந்திரன், காஞ்சிபுரம் சந்தோஷ்குமார், அரக்கோணம் அப்சியா நஸ்ரின், வேலூர் மகேஷ் ஆனந்த், தருமபுரி அபிநயா, திருவண்ணாமலை ரமேஷ்பாபு, ஆரணி பாக்கியலட்சுமி, விழுப்புரம் மு.களஞ்சியம், கள்ளக்குறிச்சி ஜெகதீசன், சேலம் மனோஜ்குமார், நாமக்கல் கனிமொழி, ஈரோடு கார்மேகன், திருப்பூர் சீதாலட்சுமி, நீலகிரி ஜெயகுமார்.

கோவை கலாமணி ஜெகநாதன், பொள்ளாச்சி சுரேஷ் குமார், திண்டுக்கல் கைலைராஜன் துரைராஜன், கரூர் கருப்பையா, திருச்சி ஜல்லிக்கட்டு ராஜேஷ், பெரம்பலூர் தேன்மொழி, கடலூர் மணிவாசகன், சிதம்பரம் ஜான்சி ராணி, மயிலாடுதுறை காளியம்மாள், நாகப்பட்டினம் கார்த்திகா, தஞ்சாவூர் ஹூமாயூன் கபீர், சிவகங்கை எழிலரசி, மதுரை சத்யாதேவி, தேனி மதன் ஜெயபால், விருதுநகர் கௌசிக், ராமநாதபுரம் சந்திர பிரபா ஜெயபால், தூத்துக்குடி ரொவினா ரூத் ஜேன், தென்காசி இசை மதிவாணன், திருநெல்வேலி சத்யா, கன்னியாகுமரி மரிய ஜெனிபர், கிருஷ்ணகிரி வித்யா வீரப்பன், புதுச்சேரி மேனகா ஆகியோரை சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

பார்பி பொம்மையின் 65ஆண்டு கால மாற்றங்கள் குறித்த கண்காட்சி.. லண்டனில் நாளை முதல் 25-ம் தேதி வரை நடைபெறும்

மராட்டியம், உ.பி., தெலங்கானா, குஜராத் சோதனையில் ரூ.327 கோடி மதிப்பு போதைப்பொருள் பறிமுதல்: 15 பேரை கைது செய்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை