தொழிற்படிப்புகளில் சேர வழிகாட்டுதல் முகாம்

 

நாமக்கல், ஜூலை 29: நான் முதல்வன் திட்டத்தின் கீழ், மாணவ-மாணவியர் தொழிற்படிப்புகளில் சேர வழிகாட்டுதல் முகாம் நாமக்கல்லில் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ்\” 10 மற்றும் 12ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய, எழுதாத, தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மாணவ- மாணவியர் தொழிற்கல்வி படிப்பில் சேர்வதற்கான உரிய வழிகாட்டுதலுக்கான உதவி மையம் கடந்த 3 நாட்களாக நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமினை முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து பேசினார். அப்போது, மாணவர்கள் உயர் கல்வி தொடர்வதற்கான முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். உதவித் திட்ட அலுவலர் பாஸ்கரன், மாணவர்களிடம் கலந்துரையாடி உயர்கல்வி குறித்து வழிகாட்டுதல் வழங்கினார்.

முகாமில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியின் விரிவுரையாளர்கள் பிரபாகரன், யசோதா, மதுரகீதா, கோமதி, புஷ்பம், ஆனந்தி, கீரம்பூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சி அலுவலர்கள் பூபதி, பழனிசாமி, பிரபு, பார்த்திபன், கொல்லிமலை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தின் பயிற்சி அலுவலர்கள் பாலமுரளி, பழனிச்சாமி, மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் விரிவுரையாளர்கள் முத்துகிருஷ்ணன், வேதராசபால்சன் ஆகியோர் மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கினர்.
மையத்தில் 87 மாணவ -மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். 5 மாணவர்கள் மோகனூர் அரசு பாலிடெக்னிக் கல்லாரியிலும், ஒரு மாணவி கீரம்பூர் அரசு தொழில்நுட்ப கல்லூரியிலும் சேர்க்கை பெற்றனர்.

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்