தரிசித்தவை

சென்னை, லட்சுமிபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ தங்கவிரல் சாய்பாபா திருக்கோயில், சாய் தர்பார் போன்ற அமைப்பில் புதிய கோயிலாக புதுப்பித்து தற்போது திருக்குட நன்னீராட்டு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. மேலும், இங்குள்ள பரிவார தெய்வங்களான, ஸ்ரீ மகாலட்சுமி, விநாயகர், சுப்ரமணியர், நவக்கிரகங்களுக்கும், விமானத்திற்கும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றது.

சென்னை ஆவடியை அடுத்த வெள்ளானூர் ஊராட்சியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ கங்கை அம்மன் ஆலயம் முதலாம் ஆண்டு தீமிதி திருவிழா, கோயில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஆலய அர்ச்சகர் கரகம் எடுத்து, 90க்கும் மேற்பட்டவர்கள் காப்பு கட்டியும், அலகு குத்தியும் ஊர்வலமாக வந்து, உடுக்கை, தாரை தப்பட்டங்கள், பட்டாசுகள், வான வேடிக்கைகள் முழங்க தீமிதித்து அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தினார்கள். தீமிதி திருவிழா முடிந்தவுடன் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. சாமி திருவீதி உலாவும் நடைபெற்றது.

சென்னை, குரோம்பேட்டை, லட்சுமி நகர், வைஷ்ணவா கல்லூரி அருகில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மகாகணபதி மற்றும் பரிவார தெய்வங்களான துர்க்கை அம்மன், பஞ்சமுக ஆஞ்சநேயர், நவக்கிரகம் ஆகிய மூர்த்திகள் புதுப்பிக்கப்பட்டு வர்ணகலாபரணம் செய்து, திருக்குட நன்னீராட்டு பெருஞ்சாந்தி பெருவிழா சிறப்பாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மகாதீபாராதனை, தீர்த்த பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் அதனைத் தொடர்ந்து அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக, இரவு உற்சவர் திருவீதி உலாவும் நடைபெற்றது.

சென்னை, குரோம்பேட்டை, நெமிலிச்சேரியில் உள்ள அருள்மிகு ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோயிலில் அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Related posts

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 79 (பகவத்கீதை உரை)

தெளிவு பெறுவோம்

மனநலத்தை சீர்படுத்தும் குணசீலம்