விசிகவின் 144 புதிய மாவட்ட செயலாளர்கள்: தொல்.திருமாவளவன் அறிவிப்பு

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 144 புதிய மாவட்டச் செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சட்டமன்ற தொகுதி வாரியாக மொத்தம் 144 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, மாவட்டச் செயலாளர்களை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்து உள்ளார். அதன் விவரம்: வடசென்னை கிழக்கு – சி.சவுந்தர், வடசென்னை மேற்கு – உஷாராணி, வடசென்னை வடக்கு – இளங்கோவன், வடசென்னை தெற்கு – அப்புன்,

மத்தியசென்னை கிழக்கு – சாரநாத், மத்தியசென்னை மேற்கு – வேலுமணி, மத்தியசென்னை வடக்கு சேத்துப்பட்டு – இளங்கோ. தென்சென்னை மையம் – சைதை ஜேக்கப், தென்சென்னை வடக்கு – கரிகால்வளவன், தென்சென்னை தெற்கு – இளையா, மேற்குசென்னை – ஞானமுதல்வன். செங்கல்பட்டு மேற்கு- பொன்னிவளவன், செங்கல்பட்டு தெற்கு- தமிழினி, காஞ்சிபுரம் மாநகர்- மதி ஆதவன், திருவள்ளூர் கிழக்கு- நீலமேகம், திருவள்ளூர் மேற்கு- தளபதி சுந்தர், திருவள்ளூர் மையம்- அருண் கவுதம், வேலூர் கிழக்கு- கோவேந்தன், வேலூர் மேற்கு – சுதாகர், திருப்பத்தூர்- வெற்றி கொண்டான், திருப்பத்தூர் வடக்கு- ஓம்பிரகாசம். செங்கல்பட்டு வடக்கு- தென்னவன்,

செங்கல்பட்டு மையம்-கானல்விழி, ஆவடி மாநகர்- ஆதவன். இது போன்று கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பூர், கோவை, திருச்சி, தஞ்சாவூர், புதுகோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், திண்டுக்கல், தேனி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர பொறுப்புகள் மாவட்டப் பொருளாளர், மாவட்ட துணை செயலாளர்கள், மாவட்ட செய்தித் தொடர்பாளர் மற்றும் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆகியவற்றின் பட்டியல் அடுத்த கட்டமாக அறிவிக்கப்பட இருக்கிறது.

Related posts

சாலையில் தீப்பற்றி எரிந்த மாநகர பேருந்து: சென்னையில் பரபரப்பு

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்

லஞ்சம் வாங்கிய பண்ருட்டி நகராட்சி உதவியாளர் கைது