விஷவாயு வந்தது எப்படி?.. ஆய்வு செய்ய புதுச்சேரி விரைகிறது ஐஐடி குழு

புதுச்சேரி: விஷவாயு வந்தது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய ஐஐடி குழு புதுச்சேரி விரைகிறது. புதுவை ரெட்டியார்பாளையம் புதுநகரில் கடந்த 11ம் தேதி கழிவறையில் இருந்து ஹைட்ரஜன் சல்பேட் விஷ வாயு பரவியதால் புதுநகர் 4-வது தெருவைச் சேர்ந்த செந்தாமரை, அவரின் மகள் காமாட்சி மற்றும் பள்ளி மாணவி செல்வராணி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்தனர். மேலும், 2 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உறவினர்கள் வீடுகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

அரசு ஆரம்ப பள்ளி அருகே தற்காலிக கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த்துறை மூலம் அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அப்பகுதியில் பாதாள சாக்கடைகளை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன்; புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள வீட்டில் விஷவாயு வந்தது எப்படி என கண்டறிவது சிரமமாக உள்ளது. அதனால் டெல்லி ஐஐடி குழுவை அழைத்துள்ளோம். ஓரிரு நாட்களில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைவார்கள் என்று கூறினார்.

Related posts

ஆற்காடு சுரேஷின் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ததாக கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மறைவு: சரத்குமார் இரங்கல்

தென்காசி வெண்ணமடை குளத்தில் படகு சேவை தொடக்கம்..!!