சென்னையில் பாஜ தலைமை அலுவலகத்தில் விஸ்வகர்மா திட்ட பயிற்சி முகாம்: திரிபுரா முன்னாள் முதல்வர் பங்கேற்பு

 

 

சென்னை: சென்னையில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விஸ்வகர்மா திட்ட பயிற்சி முகாமில் திரிபுரா முன்னாள் முதல்வர் பங்கேற்றார். சென்னை தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா திட்டத்தின் 2ம் கட்ட பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக திரிபுரா மாநில முன்னாள் முதல்வர் பிப்லப் குமார் தேப் பங்கேற்றார். மேலும் பாஜ மாநில துணைத்தலைவர்கள் கரு.நாகராஜன், வி.பி.துரைசாமி, விஸ்வகர்மா திட்ட மாநில பொறுப்பாளர் ஜி.கே.நாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பயிற்சி வகுப்பில் 500க்கும் மேற்பட்ட பாஜ நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பயிற்சி முகாமில் விஸ்வகர்மா திட்டம் குறித்தும், அதனை பொதுமக்கள் மத்தியில் எடுத்து செல்வது, தொழில் முனைவோரை இந்த திட்டத்தில் இணைப்பது தொடர்பான அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து பிப்லப் குமார் அளித்த பேட்டியில், “தமிழகத்தில் மட்டும் 3 லட்சத்து 60 ஆயிரம் மக்கள் விஸ்வகர்மா திட்டத்தில் இணைந்துள்ளனர். ஏழை மக்களின் வளர்ச்சிக்கு உதவவே ஒன்றிய அரசின் திட்டங்கள் உள்ளது. தமிழகத்தில் பாஜவின் வளர்ச்சி அண்ணாமலை தலைமையில் நன்றாக உள்ளது” என்றார்.

Related posts

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி ஜூலை 5ல் ஆர்ப்பாட்டம்: மீனவர் சங்கங்கள் அறிவிப்பு

முன்னணி வேட்பாளர்களுக்கு பெரும்பான்மை பலமில்லை; ஈரான் அதிபர் தேர்தலில் யாருக்கும் வெற்றி இல்லை: வரும் 5ல் 2ம் கட்ட வாக்குப்பதிவு

மாலத்தீவு அதிபருக்கு எதிராக சூனியம் வைத்ததாக 2 அமைச்சர்கள் கைது