விஷு பூஜைகள் நிறைவு சபரிமலை கோயில் நடை இன்று அடைப்பு

திருவனந்தபுரம்: சித்திரை விஷு பூஜைகளுக்குப் பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று சாத்தப்படுகிறது. சித்திரை விஷு சிறப்பு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த 11ம் தேதி மாலை திறக்கப்பட்டது. மறுநாள் (12ம் தேதி) முதல் சிறப்பு பூஜைகள் தொடங்கின. கடந்த 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்தனர்.

இதற்கிடையே நேற்று முன்தினம் பிரபல மலையாள நடிகர் ஜெயராம், அவரது மனைவி நடிகை பார்வதி ஆகியோர் தரிசனம் செய்தனர். இன்றுடன் சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடைகின்றன. இன்று இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் வைகாசி மாத பூஜைகளுக்காக மே 14ம் தேதி நடை திறக்கப்படும்.

Related posts

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

பொன்னேரியில் 40 சவரன் நகை கொள்ளை..!!

வாட்ஸ்அப்-ல் மெட்டா ஏ.ஐ.. ஆங்கிலம் உள்ளிட்ட 13 மொழிகளில் தரவுகள்: இதை பயன்படுத்துவது எப்படி? இதில் என்ன செய்யலாம்?