சங்பரிவார் அரசியலை விசிக தீவிரமாக எதிர்க்கிறது: அண்ணாமலைக்கு திருமாவளவன் பதிலடி

திருச்சியில் நடந்த மாநாட்டில் பங்கேற்று திரும்பியபோது விபத்தில் சிக்கி பலியான விசிக தொண்டர்கள் 3 பேரின் உடலுக்கு திருமாவளவன் நேற்று அஞ்சலி செலுத்தினார். பின்னர் நிருபர்களை சந்தித்தார். அப்போது, ‘திருமாவளவன் பாதை மாறி கடலை நோக்கி செல்கிறார்’ என அண்ணாமலை விமர்சனம் செய்தது கூறுகையில், ‘திருமாவளவன் ஆழம் தெரியாமல் இறங்க மாட்டேன். சனாதனம் என்கின்ற சங்பரிவார் அரசியலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தீவிரமாக எதிர்க்கிறோம். நாட்டு மக்களை காப்பாற்றுவதற்கு புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்பு சட்டத்தை பாதுகாப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள், தீவிரமான எதிர்ப்பை முன்னெடுக்கிறோம். தனிப்பட்ட முறையில் யார் மீதும் நமக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும், பகையும் இல்லை, என்றார். முன்னதாக திண்டுக்கலில் நடந்த திருக்குறள் பேரவையம் தொடக்க மாநாடு திருமாவளவன் பேசுகையில், ‘‘திருக்குறளை ஒரு மதம் சார்ந்த நூலாக மாற்ற முயற்சி நடக்கிறது’’ என்றார்.

Related posts

காற்று மாசுபாட்டினால் பறிபோகும் உயிர்கள்

ரூ.100 கோடி நில மோசடி வழக்கு: கரூரில் முன்னாள் அமைச்சர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி அதிரடி சோதனை

செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 10 பேர் காயம்