தமிழ்நாட்டில் பனிகாலத்தில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல்: மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை: கடந்த சில வாரங்களாகவே மாறுபட்ட பருவநிலையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சலால் பாதிக்கபட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவனைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. பனிக்காலம் மட்டுமின்றி மழை அவ்வப்போது பெய்து வருவதால் மழை நீர் தேங்கி அதில் இருந்து கொசு உற்பத்தி அதிகமாக ஏற்படுகிறது. இதன் மூலமாவும் காய்ச்சல் பாதிப்பை அதிகரிக்கிறது. சிலருக்கு வைரஸ் காய்ச்சல் டெங்குவாக மாறியுள்ளது.

தற்போது டெங்குவால் கிட்டத்தட்ட 5000 நபர்கள் தமிழகத்தில் பாதிக்கப்பட்டு உள்ளனர். வைரஸ் காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது குறிப்பாக காய்ச்சல் அல்லது டெங்கு பாதிக்கப்பட்ட இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி டெங்கு கொசுக்களை ஒழிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வருவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் கூறியதாவது: காலநிலை மாற்றத்தால் வைரஸ் காய்ச்சல் அதிகமாக உள்ளது. வைரஸ் குளிர்காலத்தில் நன்றாக வளரும் குறிப்பாக சளி ஏற்படுத்தும் வைரஸ், சுவாச ஒத்திசைவு வைரஸ் உள்ளிட்ட வைரஸ்கள் நுரையீரல் பாதித்தால் காய்ச்சல் சளி போன்றவை ஏற்படும். அதுமட்டுமின்றி சுத்தமில்லாத குடிநீர் குடிக்கும்போது, சுகாதாரமற்ற உணவை உண்ணும்போதும் வைரஸ் பரவி காய்ச்சல் ஏற்படுகிறது. காய்ச்சல் ஏற்பட்ட பிறகு உடலை நன்றாக கவனிக்க வேண்டும், குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் பள்ளிக்கு அனுப்பக்கூடாது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும், 2 நாட்களுக்கு மேல் பாதிப்பு தொடர்ந்து இருந்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும், சுயமாக மருந்து எடுத்துக்கொள்ள கூடாது, மருத்துவ ஆலோசனை படி மட்டுமே மருந்து அளிக்க வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி சரியாக செலுத்தி இருக்க வேண்டும், ஆஸ்துமா உள்ள நோயாளிகள் காலை பணியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தற்போதிய காலகட்டத்தில் இதை எல்லாம் முறையாக பின்பற்ற வேண்டும். மழை காலம் வர இருப்பதால் எலி காய்ச்சல் பரவும் எனவே அதற்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு