விருதுநகர் அருகே அரசு பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து பெண் சாவு: 7 குழந்தைகள் உள்பட 38 பேர் காயம்

விருதுநகர்: கோவை மாவட்டம், சிங்காநல்லூரில் இருந்து தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு நேற்று முன்தினம் இரவு அரசு பஸ் ஒன்று பயணிகளுடன் புறப்பட்டது. பஸ்சை திண்டுக்கல் மாவட்டம், பழநியை சேர்ந்த முருகபூபதி (36) ஓட்டினார். மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு நடத்துநரும், மாற்று டிரைவருமான பேரையூரை சேர்ந்த பிரதீப் (33) ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். நேற்று காலை 6 மணியளவில் விருதுநகர் – ஆர்.ஆர்.நகர் இடையே வச்சக்காரப்பட்டி பகுதியில் பஸ் சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பாலத்தின் தடுப்புச்சுவர் மீது மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் பஸ்சின் அச்சு முறிந்து முன்பக்க சக்கரங்கள் தனியாக கழன்று ஓடின. இதில் பிரதீப் உள்பட 24 ஆண்கள், 8 பெண்கள், 7 குழந்தைகள் என 39 பேர் காயமடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கோவை மாவட்டம், தெலுங்குபாளையத்தை சேர்ந்த புவனேஸ்வரி (33) உயிரிழந்தார்.

Related posts

தமிழகம் முழுவதும் 99 சதவீத காவல்நிலையங்களில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

கட்சி நிர்வாகிக்கு கொலை மிரட்டல்; பாஜ மாவட்ட தலைவர் மீது வழக்கு

புழல் சிறையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.40 கோடி மெத்தாம்பெட்டமைன் ₹1.5 கோடி ரொக்கம் பறிமுதல்: 9 பேர் அதிரடி கைது