விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார்: பிரேமலதா பேட்டி

சென்னை: விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார் என்று தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக விஜயபிரபாகரனும், என்.டி.ஏ கூட்டணி சார்பாக ராதிகா சரத்குமாரும், இந்தியா கூட்டணி சார்பாக திமுக வேட்பாளர் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுகின்றனர். கடந்த 4ம் தேதி காலை வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து விஜயபிரபாகரன் முன்னிலை வகித்து வந்தார். பின்னர் இறுதியில் 3,80,877 வாக்குகள் பெற்ற விஜயபிரபாகரன் 4379 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தை பெற்றார்.

இந்நிலையில், சென்னையில் தேமுதிக கட்சி தலைவர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது; விருதுநகர் மக்களவை தொகுதியில் விஜயபிரபாகரன் தோற்கவில்லை; தோற்கடிக்கப்பட்டுள்ளார். மற்றவர்கள் லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் தோற்றபோது விஜயபிரபாகரன் 4,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார். தோல்வியை முழு மனதாக ஏற்கிறோம்; மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோய். மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேர்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் என பிரேமலதா கூறியுள்ளார்.

Related posts

ஒன்றிய அரசின் புதிய சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி வக்கீல்கள் கருப்பு நாளாக அனுசரிப்பு

திருத்தணி நகராட்சி சார்பில் இயற்கை உர விற்பனை நிலையம் துவக்கம்

பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 2 பேர் தஞ்சாவூரில் கைது: ஜூலை 5ம் தேதி வரை நீதிமன்ற காவல்