விருதுநகரில் பெய்த கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சி

 

விருதுநகர், ஏப். 24: கோடை வெயிலின் தாக்கம் தமிழகம் முழுவதும் பரவலாக மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெயிலின் உக்கிரம் அதிகரித்து வரும் நிலையில், அக்னிநட்சத்திம் மே.4 துவங்கி மே.28 வரை வாட்டி வதைக்க உள்ளது. இந்நிலையில் கோடை மழை பரவலாக பெய்ய துவங்கி உள்ளது.
வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் இரு திசை காற்று சந்திப்பு காரணமாக தமிழகத்தில் ஏப்.23(நேற்று) துவங்கி ஒரு வார காலத்திற்கு மழை பெய்யும். தென்மாவட்டங்களில் ஆலங்கட்டி மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விருதுநகரில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் நேற்று மாலை 4.40 மணி முதல் மாலை 6 மணி வரை தொடர்மழையும், அதை தொடர்ந்து சாரள் மழையும் பெய்தது. வெயிலின் உக்கிர பாதிப்பில் இருந்த மக்களுக்கு நேற்றைய மழை சற்று குளிர்ச்சியை அளித்தது. வெயிலின் புழுக்கத்தில் இரவு தாக்கத்தை தொலைத்த மக்கள் நேற்று நிம்மதி பெருமூச்சு விட்டனர். விருதுநகரில் பெய்த மழையால் நகரின் தாழ்வான பகுதிகளான பழைய பஸ்நிலையம், புல்லலாக்கோட்டை ரோடு, தர்காஸ் தெரு, மென்னி தெரு, சீதக்காதி தெரு, அக்ரஹாரம் தெரு, ரயில்வே பீடர் ரோடு, சாத்தூர் ரோடு பகுதிகளில் மழைநீர் கழிவுநீருடன் தேங்கி நின்றது.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து