விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன: விருதுநகர் மாவட்ட எஸ்.பி. அறிக்கை தாக்கல்

மதுரை: விருதுநகர் மாவட்டத்தில் 2019 முதல் தற்போது வரை 69 பட்டாசு ஆலை விபத்துகள் நடந்துள்ளன. இந்த விபத்தில் 131 தொழிலாளர்கள் இறந்துள்ளனர் மற்றும் 146 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.

பட்டாசு ஆலை விபத்தில் தனது கணவர் இறந்த நிலையில் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனைவி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடந்த வெடி விபத்து வழக்கின் விசாரணை அறிக்கை அளிக்க உத்தரவிட்டுருந்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்ட உரிமம் எத்தனை என்பது
குறித்து ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய ஆணையிட்டிருந்தார்.

தொடர்ந்து மாவட்டத்தில் 1087 பட்டாசு தொழிற்சாலைகள் மற்றும் 2963 சில்லறை விற்பனை கடைகள் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் ஆலைகளில், உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்காதது, ரசாயன கலவையை முறையாக பயன்படுத்தாததால் அதிக விபத்து நடக்கிறது என விருதுநகர் மாவட்ட எஸ்.பி. தக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related posts

வழக்கு எண்ணிக்கையை வைத்து முன்கூட்டி விடுதலை செய்ய மறுக்க முடியாது: ஆயுள் தண்டனை கைதி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

சொல்லிட்டாங்க…

கதர் சட்டைக்காரரை தூக்க இலைக்கட்சி தலைவர் விரிக்கும் வலை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா