விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்கிறார்..!!

சென்னை: விருதுநகரில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் இன்று டெல்லியில் தேர்தல் ஆணையரை சந்திக்க உள்ளார். அண்மையில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிகவை சேர்ந்த விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் போட்டியிட்டார். இந்த தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாணிக்கம் தாக்கூர் வெற்றி பெற்றிருந்தார்.

இருப்பினும், விருதுநகர் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது குளறுபடிகள் நடைபெற்றதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியிருந்தார். சில மணி நேரங்களில் முடிவுகளை அறிவிக்காமல் தாமதப்படுத்தப்பட்டது. போட்டி கடுமையாக இருந்த போது வாக்கு எண்ணிக்கை வித்தியாசங்கள் குறைவாக இருந்த போதும் இதில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றசாட்டு வைத்திருந்தார்.

இது தொடர்பாக, ஏற்கனவே மறு வாக்கு எண்ணிக்கை கோரி தேமுதிக சார்பில் தேர்தல் ஆணையத்தில் வழக்கறிஞர்கள் மனு அளித்துள்ளனர். இந்த நிலையில் இன்று டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் மதியம் 3.30 மணியளவில் விஜய பிரபாகரன் தேர்தல் ஆணையரை நேரில் சந்தித்து மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட வேண்டும் என அவர் மனு கொடுக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

நான் முதல்வன் திட்டம்: பயிற்சி வழங்கும் நிறுவனங்களை தேர்வுசெய்ய டெண்டர்

காவல் ஆய்வாளரிடம் மதுபோதையில் தகராறு: 3 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக 13 வீடுகள் சேதம்