பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை


விருதுநகர்: பயிற்சி பெறாத தொழிலாளர்களை கொண்டு பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நிர்ணயித்த காலத்துக்குள் பயிற்சியை முடிக்காமல் பட்டாசு தயாரிக்கும் ஆலைகளில் உற்பத்தி நிறுத்தப்படும். பட்டாசு ஆலைகளில் விபத்தில்லாமல் பாதுகாப்பாக எப்படி பணிபுரிய வேண்டும் என ஒரு மாத கால பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. சிவகாசி பட்டாசு உற்பத்தி மையத்தில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. பயிற்சிக்கு அனுப்பாத பட்டாசு ஆலைகளுக்கு 2-வது முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.5,000 கட்டணம் செலுத்த வேண்டும். 3-ம் முறையாக கடிதம் எழுதி பயிற்சிக்கு வந்தால் ரூ.10,000 தண்ட கட்டணம் செலுத்த வேண்டும்

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு