வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளவை எட்டியது

கடலூர்: சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வீராணம் ஏரி இந்த ஆண்டில் முதன்முறையாக அதன் முழு கொள்ளவை எட்டியது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள வீராணம் ஏரி அதன் முழு கொள்ளளவான 47.50 கன அடியை எட்டியது. தொடர்ந்து கீழணையில் இருந்து வீராணம் ஏரிக்கு வரும் தண்ணீரும் நிறுத்தப்பட உள்ளது. சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 72 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு, தண்ணீர் இல்லாததால், வீராணம் வறண்டது. சில நாட்களுக்கு முன்பாக, சென்னைவாழ் மக்களுக்காக, தண்ணீர் திறக்கப்பட்டது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக குளம், குட்டை, ஆறு, ஏரி, கிணறுகளில் தண்ணீர் அதிகளவு பெருக்கெடுத்து ஓடியது. அதன் பிறகு தொடர் மழையின் காரணமாக, இன்று, வீராணம் ஏரி, அதன் முழு கொள்ளளவான, 47.5 அடி எட்டி, கடல் போல் காட்சியளிக்கிறது.

Related posts

ஜெட் விமான சோதனை ஓட்டம்: மயிலாடுதுறையில் நில அதிர்வால் பொதுமக்கள் அதிர்ச்சி

நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பிக்கள் கூட்டம்..!!

பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவதை தடுப்போம்: அமைச்சர் துரைமுருகன் பேட்டி