வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு அனுப்பும் குடிநீர் நிறுத்தம்

காட்டுமன்னார்கோவில்: கடலூர் மாவட்டத்தின் மிக பெரிய ஏரியாக காட்டுமன்னார்கோவில் அருகில் உள்ளது வீராணம் ஏரி. 47.50 அடி மொத்த கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்கு நாளொன்றிற்கு விநாடிக்கு 63 முதல் 70 கனஅடி வரை ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது.

தற்போது தண்ணீர் வரத்து இல்லாததாலும், வெயிலின் தாக்கம் அதிகரித்ததாலும் ஏரியின் நீர்மட்டம் வேகமாக குறைந்து, தற்போது 6.50 அடியாக உள்ளது. இதனால் சென்னை குடிநீருக்கு கடந்த 1ம் தேதி முதல் தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்பட்டது. வழக்கமாக மார்ச் இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் சென்னை அனுப்பப்படும் குடிநீர் நிறுத்தப்படும். ஆனால் நடப்பாண்டில் ஏரியில் தண்ணீர் வரத்து இல்லாததால் முன்கூட்டியே நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

தூய்மை சேவை விழிப்புணர்வு மாரத்தான்: நகராட்சி நிர்வாக இயக்குநர் தொடங்கி வைத்தார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால், கடனுதவி: கலெக்டர் வழங்கினார்

பட்டப்பகலில் வீட்டில் நகைகள் கொள்ளை