விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம்

 

விராலிமலை,ஜூலை 31: விராலிமலையில் கலைஞர் நூற்றாண்டு விழா இலவச மருத்துவ முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.விராலிமலை மேற்கு திமுக மற்றும் ஹியர் ஜாப் காது கருவி நிலையம் மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழா மருத்துவ முகாமை விராலிமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடத்தினர். இந்த மருத்து முகாமை திமுக பொதுக்குழு உறுப்பினர் தென்னலூர் பழனியப்பன் தொடங்கிவைத்தார். விராலிமலை ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன்(மேற்கு), அய்யப்பன்(மத்தி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் காது, கண்களுக்கான லேசிக் சிகிச்சை, கருவிழி சேவை,குழந்தை மருத்துவம்,க்ளோகோமா உள்ளிட்ட கண்விழி தொடர்பான பல்வேறு சிகிச்சைகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கண் நோய் தொடர்பான அறிவுறைகள் வழங்கப்பட்டது. இதில் ஆடியோலாஜிஸ்ட் சிவரஞ்சனி, தலைமை மருத்துவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று சிகிச்சை மற்றும் மருத்துவ உதவி வழங்கினர்.ஏற்பாடுகளை மக்கள் தொடர்பு அலுவலர் அருண்சுனை பாண்டியன் மற்றும் சிவா ஆகியோர் செய்திருந்தனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்