வைரலோ வைரல்

மை லேப்டாப்

நேஹா என்னும் பெண் சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் தன் அண்ணன் மகளின் திறமை குறித்து ஒரு பதிவு செய்திருந்தார். அதுதான் பலலட்சம் லைக்குகள், பகிர்வுகள் என வைரலாகிக் கொண்டிருக்கிறது. அதாவது தனது லேப்டாப்பைத் தரும்படி கேட்ட அண்ணன் மகளுக்கு ‘நோ’ சொல்லியிருக்கிறார். காரணம் அதில் முக்கியமான பணி சார்ந்த டேட்டாக்கள் இருப்பதால் விளையாடும் பொருள் அல்ல என அவர் கூறியிருக்கிறார். இதனால் கோபமடைந்த சிறுமி மூன்று மணி நேரங்கள் எடுத்துக்கொண்டு ஒரு அட்டையில் தனக்குத் தானே ஒரு லேப்டாப்பை உருவாக்கியிருக்கிறார். அது வேலை செய்யாது என்றாலும் அக்குழந்தையின் திறமையையும், செயலையும் கண்டு இணைய உலகம் வியந்து பாராட்டி வருகிறது. அச்சு அசலாக ஒரு கருப்புத் திரை, சரியான அளவில் வரையப்பட்ட லேப்டாப் பட்டன்கள் மற்றும் திரையில் ஆப்பிள் என்னும் வார்த்தையாக இந்தப் புகைப்படம் வைரல் ஹிட்.

7 வருடங்கள் நோ ஷாம்பூ!

டிஜிட்டல் பிரபலமான எய்டன் என்பவர் தனது சேனலில் 7 வருடங்கள் நோ ஷாம்பூ என்னும் சவாலை எடுத்துக்கொண்டு அதில் ஆறு வருடங்களாக எவ்வித ஷாம்பூவும் பயன்படுத்தாமல் அதில் வெற்றியும் கண்டுள்ளார். முன்பைக் காட்டிலும் தனது தலைமுடி நன்கு வளர்வதாகவும், அடர்த்தியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு இருந்த பொடுகுப் பிரச்னைக்கான ஷாம்பூ பயன்படுத்தியபோது பிரச்னை இன்னும் அதிகரித்ததாகவும், நிறுத்திய பின் முற்றிலும் குணமானதாகவும் கூறியுள்ளார். இதை வாழ்நாள் முழுக்க தொடரப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலாக, எங்கே இந்தியா, ஆப்பிரிக்கா, போன்ற வெப்ப நாடுகளில் ஷாம்பூ போடாமல் இருந்து பாருங்கள் அப்போது தெரியும் உண்மையான பிரச்னை, ஒருநாள் விட்டு ஒருநாள் ஷாம்பூ போடும்போதே அடிக்கும் வெப்பத்தில் முடியை விட ஒட்டும் தூசி அதிகமாக இருக்கிறது இதில் ஆறு வருடங்கள் தலை அலசாமல் எப்படி ஓட்டுவது என கிண்டலாகவும் கேட்டு வருகிறார்கள்.

Related posts

ஹிஸ்புல்லா மீதான 21 நாட்கள் போர்நிறுத்த முன்மொழிவை ஏற்க முடியாது: நட்பு நாடுகளுக்கு இஸ்ரேல் பிரதமர் பதில்

ஊட்டி தாவரவியல் பூங்கா மாடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு அலங்காரம்

சிறப்பு நீதிமன்ற உத்தரவின்பேரில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குப்பதிவு செய்துள்ளது லோக் ஆயுக்தா காவல் துறை