வைரலோ வைரல்

தாம் நெக்லெஸ், முந்திரிக் காதணி!

வசுதா மேக் ஓவர் என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பிணி ஒருவர் தனது சீமந்தத்திற்காக செய்துகொண்ட அலங்காரம்தான் தற்போது வைரல் மோட். பொதுவாகவே வளைகாப்பு நிகழ்வுகளுக்கு அதீத உலோகங்கள், பாசிகள், கற்கள் நிறைந்த நகைகள் வேண்டாம் என்று பெரியவர்கள் சொல்வதுண்டு. அதை மனதில் வைத்துக்கொண்டு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் வசுதா என்கிற கலைஞர் தன்னிடம் தேடி வரும் சீமந்த நிகழ்வு அலங்காரங்களுக்கு இயற்கையான பொருட்களையே நகைகளாகப் பயன்படுத்துகிறார். இவரின் முந்தைய மல்லிகை மற்றும் தாமரைப் பூக்களால் செய்யப்பட்ட அலங்காரம் டிரெண்டானது போல் தற்போது பாதாம், முந்திரி, ஏலம் உள்ளிட்டவற்றைக் கொண்டு உருவாக்கிய நெக்லெஸ், அட்டிகை, காதணி, கை வங்கி என ஒரு பெண் அணிந்து போஸ் கொடுக்க அந்த வீடியோதற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

படிக்கச் சொன்ன விஜய் தேவரகொண்டா!

2011ம் ஆண்டு வெளியான நூவிலே படம் மூலம் சினிமாவில் கால் பதித்தவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி, கீத கோவிந்தம் என இவருக்கு வெற்றியைத் தேடி நிறைய ரசிகர்கள் உருவானார்கள். குறிப்பாக பெண் ரசிகைகள் அதிகமானார்கள். இந்நிலையில் ‘ இந்த வீடியோவிற்கு விஜய் தேவரகொண்டா பதில் அளித்தால்தான் நாங்கள் தேர்வுக்கு தயாராவோம்’ என இரண்டு டீனேஜ் பெண்கள் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட அதற்கு பொறுப்பாக விஜய் தேவரகொண்டாவும் ‘90% மதிப்பெண் வாங்குங்கள், நான் உங்களைசந்திக்கிறேன்’ என அவ்விரு டீனேஜ் பெண்களையும் ஊக்கப்படுத்தியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. பொறுப்புணர்ந்து இப்படி படிக்கச் சொல்லி ரிப்ளை கொடுக்க அவரை பலரும் பாராட்டி வருகிறார்கள்.

 

Related posts

அரசியலமைப்பு சட்டத்தின்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ தற்போது சாத்தியமில்லை: ப.சிதம்பரம் கருத்து

கெஜ்ரிவால் இன்று ராஜினாமா? மாலை 4.30 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்

ராகுல்காந்தியின் நாக்கை வெட்டுபவருக்கு ரூ.11லட்சம் : சிவசேனா எம்எல்ஏ சர்ச்சை கருத்து