வங்கதேசத்தில் வன்முறை திரிபுரா எல்லையில் கூடுதல் எச்சரிக்கை: திப்ரா தலைவர் வலியுறுத்தல்

அகர்தலா: வங்கதேச அரசின் சர்ச்சைக்குரிய இடஒதுக்கீடு முடிவை கண்டித்து மாணவர்கள் போராட்டம் வெடித்துள்ளது. இப்போராட்டம் வன்முறையாக மாறி தீவிரமடைந்து 50 பேர் பலியாகி உள்ளனர். வங்கதேசத்தில் தங்கிப் படிக்கும் இந்திய மாணவர்கள் 778 பேர் நாடு திரும்பி உள்ளனர். இவர்களில் 100க்கும் மேற்பட்டோர் திரிபுரா வழியாக சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். வங்கதேசத்துடன் திரிபுரா மாநிலம் 856 கிமீ நீள எல்லையை பகிர்ந்து கொள்கிறது.

இந்நிலையில், திரிபுரா அரசியல் கட்சியான திப்ரா மோதா தலைவர் பிரத்யோத் கிஷோர் மாணிக்யா டெபர்மா தனது பேஸ்புக் பதிவில், ‘‘கிழக்கு பாகிஸ்தான், வங்கதேசத்தில் அமைதியின்மை ஏற்படும் போதெல்லாம் திரிபுரா மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை வரலாறு சொல்கிறது. தற்போது வங்கதேசத்தின் உறுதியற்ற தன்மை திரிபுரா, அசாம், மேகாலயா போன்ற வடகிழக்கு மாநிலங்களை உடனடியாக பாதிக்கிறது. குறிப்பாக சட்டவிரோத இடம்பெயர்வுகள் பழங்குடியின மக்களை பாதிக்கிறது. அவர்களின் நிலங்கள் பறிபோகும் நிலை ஏற்படுகிறது. எனவே, எல்லையில் அதிக எச்சரிக்கையுடன் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டுமென இந்திய அரசை வலியுறுத்துகிறேன்’’ என கூறி உள்ளார்.

Related posts

பள்ளியில் சர்ச்சைக்குரிய சொற்பொழிவு: குழு அமைப்பு

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 900 புள்ளிகளுக்கு மேல் சரிவு!!

சாலையில் உள்ள மனநலம் பாதித்தவர்கள்: அறிக்கை தர ஐகோர்ட் ஆணை