வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும்: விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம்

பாரிஸ்: வினேஷ் போகத் விவகாரத்தில் ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என விளையாட்டுகளுக்கான சமரச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிசில் இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டியானது நடைபெற்று வருகிறது. இதில் மகளீருக்கான 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த போட்டியில் இந்திய அணி சார்பாக வினேஷ் போகத் விளையாடி வந்தார்.

இதில், நடைபெற்ற 50 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்த அரையிறுதி போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத், கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மான் லோபன் மோதி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். அதை தொடர்ந்து நடைபெற இருந்த இறுதி போட்டிக்கு முன் உடல் தகுதி பரிசோதனையில் 50 கிலோ எடைப்பிரிவில் 100 கிராம் அதிகம் இருந்ததாக கூறி, வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

இறுதிப்போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், அதை எதிர்த்தும், வெள்ளிப் பதக்கம் கோரியும் வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் பதக்க வாய்ப்பை இழந்த வினேஷ் போகத், ஓய்வையும் அறிவித்தார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்துள்ள மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தின் மனுவை.

இன்று மாலை மேல்முறையீடு குறித்து விளையாட்டுகளுக்கான நடுவர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்க மத்தியஸ்தராக அனபெல் பென்னெட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்படும். ஒலிம்பிக் போட்டி முடிவதற்குள் மேல்முறையீடு தொடர்பாக தீர்ப்பு வழங்கவும் முடிவு செய்துள்ளது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்