வினேஷ் போகத் விவகாரத்தில் பிரதமர் தலையிட வேண்டும்: மாமனார் கோரிக்கை

புதுடெல்லி: பாரிசில் ஒலிம்பிக் போட்டி நடந்து வருகிறது. இதில், மல்யுத்தம் பெண்கள் 50 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தார். எனினும், வினேஷ் போகத், உடல் எடை 100 கிராம்கள் வரை கூடி இருந்ததாக அவர் தகுதி நீக்கம் செய்து அறிவிக்கப்பட்டார். இதையடுத்து சர்வதேச மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக வினேஷ் போகத் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், வினேஷ் போகத் விவகாரம் குறித்து அவரது மாமனார் ராஜ்பால் ரதி கூறுகையில், ‘அவள் தனது 100 சதவீதத்தை கொடுத்து விட்டாள். இந்த விஷயத்தில் ஏதேனும் சதி இருக்கலாம். ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க பிரமதரை கேட்டு கொள்கிறோம். இது நம் உரிமை, அவள் நம் தேசத்தின் மகள். வெள்ளிப் பதக்கம் அவளின் உரிமை. நாங்கள் இன்னும் அவளிடம் பேசவில்லை. அவள் இங்கு வந்ததும், ஓய்வு முடிவை மாற்றி கொண்டு நாட்டிற்கு தங்கம் வெல்ல தயாராகுமாறு பேசுவோம்’ என்றார்.

Related posts

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடி முதலீடு செய்கிறது ஜேபில் நிறுவனம்

கோவை மேட்டுப்பாளையம் அருகே சாலை விபத்தில் சிக்கிய கார், பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்தது