விண்டி செயலி!

ஜூ ன், ஜூலை வந்துவிட்டாலே எப்போது எந்த சமயம் மழை பெய்யும், எப்போது வெயில் சுட்டெரிக்கும் என்னும் மனநிலையிலேயே சுற்றிக் கொண்டிருப்போம். அதற்குத்தான் உதவுகிறது விண்டி.காம் செயலி (Windy.com – Weather Forecast)கிட்டத்தட்ட துள்ளியமான காலநிலை, மற்றும் காற்றின் வேகம், அடுத்த ஒரு வாரத்திற்கான மழை, வெயில் நிலவரங்கள், லைவ் மேப் மற்றும் காற்றழுத்தத் தாழ்வுநிலை விவரங்கள் என இந்தச் செயலி காலநிலை சார்ந்த அத்தனைக் கேள்விகளுக்கும் பதிலாக இருக்கிறது. கூகுள் பிளே ஸ்டோரிலேயே இலவசமாக தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். குறிப்பாக குழந்தைகள், மருத்துவத் தேவைகள் கொண்ட வயதானவர்கள் உள்ள வீடுகள் என முன்னெச்சரிக்கையாக இருக்க பலவாறாக உதவுகிறது. மின்சாரத் தேவைகள், வீட்டுக்குத் தேவையான பலசரக்குகள், மருந்துகள் என திட்டமிட இந்த செயலியைப் பயன்படுத்தலாம். மேலும் நீண்ட தூரப் பயணம் செல்வோரும் கூட இந்தச் செயலியின் மூலம் காலநிலை அறிந்து செயல்படலாம்.

Related posts

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பயங்கர தீ

உ.பி.யில் 121 பேர் பலியான சம்பவம் எதிரொலி; ஆக்ராவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போலே பாபாவின் 2 நிகழ்ச்சிகள் ரத்து

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!