விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதிதர கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் : பசுமை தீர்ப்பாயம்

சென்னை: விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதிதர கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில், சென்னையைச் சேர்ந்த ஹரிஹரன் என்பவர், நீர்நிலைகளில் மாசு ஏற்படாமல் பாதுகாக்க, விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்களில் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதை தடை செய்து, மாற்றாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதலை பின்பற்றி சிலைகளை கரைப்பதற்கு ஏதுவாக செயற்கையான நீர் நிலையை ஏற்படுத்த வேண்டும் என மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர்குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் இன்று தீர்ப்பு அளித்தனர். அந்த தீர்ப்பில்,”விநாயகர் சிலை கரைப்பால் நீர் நிலை மாசடைவது மட்டுமின்றி கரையாத பாகங்களை எடுக்க வேண்டிய சுமை அரசுக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஏற்படுகிறது. அறிவிக்கப்படாத நீர் நிலைகளில் சிலை கரைக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையில் அதிகாரிகள் உள்ளனர்.

எனவே விநாயகர் சதுர்த்தியின்போது சிலைகள் கரைப்புக்கு அனுமதிதர கட்டணம் நிர்ணயிக்க தமிழ்நாடு சுற்றுச்சூழல்துறை செயலர் தலைமையிலான குழுவுக்கு உத்தரவிடுகிறோம்.சிலைகளின் உயரத்திற்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும். அனுமதி வழங்க வசூலிக்கப்படும் கட்டணத்தை அறிவிக்கப்பட்ட நீர்நிலைகள் பராமரிப்புக்கு செலவிட வேண்டும். அறிவிக்கப்படாத நீர்நிலைகளில் சிலைகளை கரைத்தால் விதிக்கப்படும் அபராதம் குறித்து விநாயகர் சதூர்த்தி வரும் 3 மாதங்கள் முன்பே விளம்பரப்படுத்தவும் ஆணையிடப்படுகிறது,”இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு