விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் மாற்றம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு

விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மரணம் அடைந்ததையொட்டி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்தல் அரசியல் கட்சிகள் தேர்தல் பணியை தொடங்கியுள்ளது.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகளை மாற்றம் செய்து கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்; விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வந்த நா.புகழேந்தி மறைவெய்திய காரணத்தால் கழகப் பணிகள் செவ்வனே நடைபெற தெ.கெளதம்சிகாமணி, எம்.எஸ். (ஆர்த்தோ) விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பணியாற்றி வரும் செஞ்சி கே.எஸ்.மஸ்தானை அப்பொறுப்பிலிருந்து அவர்களை விடுவித்து, அவருக்குப் பதிலாக ப.சேகர், (28, ஜெயபுரம் 2வது தெரு, திண்டிவனம், விழுப்புரம் மாவட்டம் – 604 001) விழுப்புரம் வடக்கு மாவட்டக் கழகப் பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி