திருக்கழுக்குன்றம் அருகே கல் குவாரி அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு: குடும்ப அட்டைகள் கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைப்பு

செங்கல்பட்டு:திருக்கழுக்குன்றம் அருகே, கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, குடும்ப அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.  செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாலுகா குண்ணவாக்கம் கிராமம் புதுப்பட்டினம் சாலையில் சேலம் மைன்ஸ் என்ற பெயரில் கடந்த 9 ஆண்டுகளாக கல்குவாரி இயங்கி வருகிறது. இந்த கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிகளவில் பள்ளமெடுத்து கற்களை வெட்டி எடுத்து வருகின்றனர். இது பற்றி அப்பகுதி பொதுமக்கள் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துள்ளனர்.

முறைகேடாக செயல்பட்ட இந்த கல்குவாரி மீது ரூ.7.6 கோடி நஷ்ட ஈடுகட்டுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சூழ்நிலையில், செங்கல்பட்டு நிர்வாகம் சேலம் மைன்ஸ் கல் குவாரி அருகிலேயே அரசு புறம்போக்கு மலைப்பகுதி நிலத்தில் புதிய கல் குவாரி அமைக்க அனுமதி வழங்கியுள்ளது. புதிய கல்குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கல்குவாரியை முற்றுகையிட சென்றால் போலீசாரை வைத்து உங்களின் மீது பொய் வழக்கு தொடர்வேன் என்று திருக்கழுக்குன்றம் போலீசாரை வைத்து புதிய கல்குவாரி உரிமையாளர் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனால், நாங்கள் அனைவரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இந்த கல்குவாரியால் சாலைகள் பழுதாகிறது. கல்துகள்கள் காற்றில் பறப்பதால் சுவாசக்கோளாறு ஏற்படுகிறது. அதோடு நீராதாரம் பாதிக்கப்படுகிறது. பாறாங்கற்களை உடைப்பதற்காக வெடி வைத்து அதனால் வருகிற வெடிச்சத்தம் வீட்டின் சுவர்கள் விரிசல் ஏற்படுகிறது.

இதுபோன்று பொதுமக்களை கஷ்டப்படுத்தி கல்குவாரி நடத்தவேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வியை எழுப்பிய அப்பகுதி மக்கள் இனி நாங்கள் அந்த கிராமத்தில் வசிக்க போவதில்லை என ஒட்டுமொத்த கிராமமக்கள் அரசு வழங்கிய தங்களது குடும்ப அட்டையை கலெக்டரிடம் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதனால்‌, அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நேரில் வந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார்கள் என கலெக்டர் பொதுமக்களிடம் ராகுல்நாத் தெரிவித்தார். இதையடுத்து, கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related posts

அக்டோபர் 2ம் தேதி திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை ஒட்டி காலை 10 மணி முதல் முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம்!

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு கண்டனம்

கொடைக்கானலில் தொடரும் இ-பாஸ் நடைமுறை!