ஊர்ப்புற நூலகர்கள் 446 பேருக்கு 3ம் நிலை நூலகராக பதவி உயர்வு அரசாணை வெளியீடு

சென்னை: ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுக்கும் மேலாக பதவி உயர்வின்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றிய 446 பேருக்கு 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமரகுருபரன் நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில், ஊர்ப்புற நூலகங்களில் 10 ஆண்டுக்கும் மேலாக பதவி உயர்வின்றி ஊர்ப்புற நூலகர்களாக பணியாற்றி வரும், 3ம் நிலை நூலகர்களுக்கு இணையான கல்வித்தகுதி மற்றும் பணி அனுபவம் கொண்ட 446 பேருக்கு நிலை 8 என்ற காலமுறை ஊதியத்துடன், பணி நியமன முறை மற்றும் இட ஒதுக்கீடு ஆகிய விதிகளை தளர்வு செய்து 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இந்த 446 ஊர்ப்புற நூலகர்களுக்கு நிலை 8 (ரூ.19,500-62,000) என்ற காலமுறை ஊதிய நிலையில், 3ம் நிலை நூலகர்களாக பதவி உயர்வுக்கான ஊதிய செலவினத்தை அரசுக் கணக்கில் பற்று வைக்கவும், மீளச் செலுத்தவும் பொது நூலக இயக்குநருக்கு அனுமதி வழங்கப்படுகிறது என கூறப்பட்டுள்ளது. நூலகர்களுக்கு பதவி உயர்வு வழங்கியதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் தாயார் மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சொல்லிட்டாங்க…

சொந்த மாவட்டத்திலேயே தலைமறைவு வாழ்க்கை வாழும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா