இடிந்து சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை அகற்ற வேண்டும்

 

வேதாரண்யம், ஜூலை 26: நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சி பகுதியில் உள்ள பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சிக்கு உட்பட்ட வேளாணிமுந்தல் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த பல வருடங்களாக பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலகம் தற்போது வேறொரு கிராம நிர்வாக அலுவலகத்தில் இயங்கி வருகிறது. பழுதடைந்த அலுவலகத்திற்கு அருகில் குடியிருப்புகள் உள்ளன. அதில் உள்ள சிறுவர்கள் கட்டிடத்தின் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் விளையாடி வருகின்றனர். இந்த நிலையில் தானாகவே கட்டிடத்தின் கற்கள் பெயர்ந்து விழுகின்றன. இது குறித்து பல முறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறுகின்றனர். உயிர் பலி ஏற்படுவதற்கு முன்பு பழுதடைந்த கிராம நிர்வாக அலுவலர் கட்டிடத்தை அப்புறப்படுத்த அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை