விக்கிரவாண்டியில் 3 வாக்குச் சாவடிகளில் இயந்திர கோளாறு: வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம்

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவை தொடர்ந்து காலியாக இருந்த விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் சார்பில் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டுள்ளனர். 138 மையங்களில் அமைக்கப்பட்டுள்ள 276 வாக்குச் சாவடிகளில் 2,37,031 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர்.

பாதுகாப்பு பணியில் 2,631 காவலர்களும், தேர்தல் பணியில் 1,335 அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விக்கிரவாண்டியில் 1,16,962 ஆண் வாக்காளர்கள், 1,20,040 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினத்தவர் 29 பேர் உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மாம்பழப்பட்டு 66-வது வாக்குச்சாவடி மையத்தில் மின்னணு வாக்கு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டது. காணை 126-வது வாக்குச்சாவடியிலும் மின்னணு வாக்கு இயந்திரம் பழுதாகி உள்ளது. ஒட்டன் காடுவெட்டி பகுதியில் 68ஆவது மையத்திலும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டுள்ளது. பழுதான மின்னணு வாக்கு இயந்திரத்தை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்

Related posts

கனமழை எதிரொலி: மும்பை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை: கடந்த 4 நாளில் ரூ.3160 சரிவு… நகை வாங்குவோர் மகிழ்ச்சி!

தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்யும்..!!