விக்கிரவாண்டியில் வாக்குச்சாவடியில் பெண்ணுக்கு கத்திக்குத்து; மாஜி கணவர் கைது

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அடங்குணம் கிராமத்தை சேர்ந்தவர் கனிமொழி (49). இவர் கணவர் இறந்துவிட்ட நிலையில் திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் பகுதியில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர் அடிக்கடி தனது தாய் வீடான அடங்குணம் வந்துவிட்டு செல்வார். அப்போது இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த ஏழுமலை(65) என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின் இருவருக்கும் திருமணம் நடந்து 6 மாதம் மட்டும் வாழ்ந்த நிலையில் பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கனிமொழி 2வது கணவரை பிரிந்து சென்று வேட்டவலத்தில் வசித்து வருகிறார்.

இந்த நிலையில், கனிமொழிக்கு விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட அடங்குணம் கிராமத்தில் தான் வாக்கு உள்ளது. எனவே இன்று வாக்கு செலுத்துவதற்காக அவர் அடங்குணம் வந்தார். பின்னர் டி. கொசப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடி எண் 40ல் கனிமொழி வாக்களிக்க சென்றார் அப்போது கனிமொழியை பார்த்த ஏழுமலை என்னை தவிக்க விட்டு போய்விட்டாயே என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் ஆத்திரத்தில் அவர் பேனாகத்தியால் கனிமொழியின் கழுத்தில் குத்தி கீறிவிட்டார்.

இதில் படுகாயமடைந்த கனிமொழியை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். தகவல் அறிந்து வந்த கஞ்சனூர் போலீசார் ஏழுமலையை பிடித்து காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஏழுமலை பல்வேறு கொலை வழக்குகளில் சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் விபரீதம் அரிவாளால் வெட்டி மனைவி படுகொலை: கணவன் கைது, ஸ்ரீபெரும்புதூர் அருகே பயங்கரம்

பருவமழையை சமாளிக்க ஒக்கியம் மடுவு நீர்வழிப்பாதை தயார்: மெட்ரோ நிர்வாகம் தகவல்

வீட்டில் பதுக்கி வைத்து மது விற்ற பெண் கைது