விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளது; மாவட்ட ஆட்சியர் தகவல்

விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், முன்னேற்பாட்டு பணிகள் சிறப்பாக நடைபெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான பழனி தெரிவித்துள்ளார்.

இந்த தொகுதியில் 1,16,962 ஆண் வாக்காளர்களும், 1,20,040 பெண் வாக்காளர்களும், 29 மாற்று பாலினத்தவர் என மொத்தமாக 2,37,031 வாக்காளர்கள் உள்ளனர். 276 வாக்குச்சாவடி மையங்களில் 662 வாக்குப்பதிவு கருவிகளும் (Ballot Unit). 330 கட்டுப்பாட்டு கருவிகளும் (Control Unit) மற்றும் 357 வாக்குப்பதிலினை உறுதி செய்யும் கருவிகள் (VVPAT) என மொத்தம் 1349 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

பதற்றமான வாக்கு சாவடி 45 உள்ளதால் அங்கு பணி புரிய 53 நுண்பார்வையாளர்கள் பணியில் இருப்பார்கள். தொகுதிக்கு உட்பட்ட அரசு, அரசு சார் அலுவலகங்கள்,தனியார் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர்/ மாவட்ட தேர்தல் அதிகாரி பழனி கூறியுள்ளார்.

Related posts

மெரினா வான் சாகச நிகழ்ச்சியில் கூட்ட நெரிசலால் யாரும் உயிரிழக்கவில்லை, வெயிலின் தாக்கத்தால் தான் உயிரிழப்பு ஏற்பட்டது : அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தேர்வர்களின் நலன் கருதி நேர்முகத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்: டிஎன்பிஎஸ்சி-க்கு ராமதாஸ் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு