விக்கிரவாண்டி இடைத்தேர்தல் கணினி மூலம் குலுக்கல் முறையில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்வு

*ஆட்சியர், தேர்தல் பார்வையாளர் முன்னிலையில் நடந்தது

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குச்சாவடி பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கணினி குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் பணி நடந்தது.விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணினி மூலம் குலுக்கல் முறையில் நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரான ஆட்சியர் பழனி தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அமித் சிங் பன்சால் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஆட்சியர் பேசுகையில், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. இடைத்தேர்தலுக்காக 276 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தற்போது வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிவதற்கான வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யும் பணி கணினி மூலம் குலுக்கல் முறையில் நடத்தப்பட்டது.

மொத்தமுள்ள 276 வாக்குச்சாவடி மையங்களில், 331 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் – 1. 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -2, 331 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் -3, 31 வாக்குப்பதிவு நிலை அலுவலர்கள் 4 என மொத்தம் 1,355 வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்புதிவு நிலை அலுவலர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related posts

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஐ.டி. நிறுவனமான கேப்ஜெமினி, தமிழ்நாட்டில் ரூ.1,000 கோடி முதலீடு செய்கிறது!!

மும்பை பங்குச்சந்தையில் 80,000 புள்ளிகளை கடந்தது சென்செக்ஸ்..!!

பாஜக பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி.. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் கைது!