விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 4வது இடம்தான் என்பதால் அதிமுக போட்டியிடவில்லை: அழிவுக்கு ஜெயக்குமார்தான் காரணம்

திருச்சி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 3வது, 4வது இடத்துக்கு வருவோம் என தெரிந்துதான் அதிமுக போட்டியிடவில்லை என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருச்சியில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
ஒரு கட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும், போட்டியிடாமல் ஒதுங்கி இருக்கிறேன் என்பவர்கள், யாருக்கு வாக்களிக்க வேண்டும், யாருக்கு வாக்களிக்க கூடாது என பிரசாரம் செய்வதை சமூக வலைத்தளங்களில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிட்டால் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்கு வந்து விடுவோம் என தெரிந்துதான் அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை.

அரசியலில் படிக்காமல் இருந்தால் எப்படி இருப்பார்கள் என்பதற்கு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒரு உதாரணம். 1980,90களில் அப்பொழுது இருந்த தலைவர்கள் வாங்கிய ஓட்டை வைத்துக்கொண்டு அதிமுக என்கிற கட்சி இருந்து வருகிறது.

அதிமுகவின் அழிவுக்கு பல பேர் காரணம் என்றால், அதில் முதல் காரணம் ஜெயக்குமார். பாஜவில் இருந்து அண்ணாமலை வெளியே அனுப்பப்பட வேண்டும் என ஜெயக்குமார் போன்றோர் விரும்புகிறார்கள். அண்ணாமலை போனால் என்னை போல் பலர் வருவார்கள். அண்ணாமலையை அனுப்பி விட்டால் அதிமுக இழந்த இடத்தை பிடித்து விடலாம் என அவர்கள் நினைப்பது பகல் கனவு. ஜெயக்குமார், முனுசாமி ஆகியோர் ஒரு முறை செய்தியாளர்களை சந்தித்தால் பாஜ ஒரு சதவீதம் வளர்ச்சி பெறும். எனவே அவர்கள் தொடர்ந்து பேசிக்கொண்டே இருக்கட்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு