இணை சார்பதிவாளர் ஆபீசில் விஜிலன்ஸ் ரெய்டு: ரூ.2 லட்சம் பறிமுதல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டும் வரன்முறை செய்யப்படாத ஏராளமான வீட்டு மனைகள் பத்திரப்பதிவு செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து நேற்று மாலை 3.30 மணியளவில், லஞ்ச ஒழிப்புத்துறையை சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர், திருவண்ணாமலை- வேலூர் சாலையில் உள்ள, இணை சார் பதிவாளர் அலுவலகம் (எண்- 1) அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், கணக்கில் வராத ரூ.2 லட்சம் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக, சார் பதிவாளர் மற்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். அதேபோல், அலுவலகத்துக்குள் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வைத்திருந்த பணத்தை பறிமுதல் செய்து அதற்கான ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு ஒப்படைக்கப்பட்டது. இரவு 9 மணி வரை விசாரணை நடந்தது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது