பலியான பெண் பயிற்சி மருத்துவர் விவகாரம் சமூக ஊடகங்களில் வரும் வெறுப்பு பதிவுகள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்: சிபிஐக்கு கொல்கத்தா நீதிமன்றம் உத்தரவு

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியில் பயிற்சி மருத்துவராக இருந்த பெண் கடந்த மாதம் 9ம் தேதி பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் பற்றி, அவரது புகைப்படத்துடன் சமூக ஊடகங்களில் வெறுக்கத்தக்க சில தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் தலைமையிலான டிவிஷன் பெஞ்ச் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட பெண் மருத்துவர் பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வெறுக்கத்தக்க பதிவுகள் குறித்து சிபிஐ வரும் 18ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்