பாம்பு கடித்து பலி: குடும்பத்துக்கு இழப்பீடு தர ஐகோர்ட் ஆணை

சென்னை: பாம்பு கடிக்கு உரிய சிகிச்சை கிடைக்காமல் பலியான விவசாயி குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாம்பு கடிக்கு சிகிச்சை பெற சென்றபோது ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டப்பட்டிருந்ததால் முரளி உயிரிழந்தார். 24 மணி நேரமும் இயங்க வேண்டிய ஆரம்ப சுகாதார நிலையம் பூட்டியிருந்ததால் தன் கணவர் பலியானதாக கூறி மனைவி அருணா வழக்கு தொடர்ந்தார். மனுதாரர் குழந்தைகளுக்கான கல்வி செலவுக்காக ரூ.2 லட்சத்தை 2 வாரத்தில் செலுத்த உத்தரவிட்டதுடன் மனுதாரர் அருணாவுக்கு அரசு துறையில் தற்காலிக அடிப்படையில் பணி வழங்கவும் ஐகோர்ட் ஆணையிட்டது.

Related posts

முதல்வர் மு.க.ஸ்டாலினால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியிலும் நிறைவேற்றப்பட்டுள்ள முத்தான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூரில் தண்ணீர் பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொலை