துணைவேந்தர் தேர்வு செயல்முறை பல்கலை. மானியக்குழு விதிமுறைகளுடன் இருக்கவேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி தகவல்

சென்னை: துணைவேந்தர் தேர்வு செயல்முறை பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளுடன் இருக்கவேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகங்களின் கல்வித் தரம் மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்துவது குறித்து பல்கலைக்கழகங்களின் சிண்டிகேட், செனட், நிர்வாகக் குழு உறுப்பினர்கள், வேந்தரால் பரிந்துரைக்கப்பட்டவர்களுடன், பல்கலைக்கழகங்களின் வேந்தரும், ஆளுநருமான ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ்பவன் மாளிகையில் நேற்று சந்தித்தார்.

இக்கூட்டம் குறித்து ஆளுநர் மாளிகை வெ ளியிட்டு ள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிண்டிகேட், செனட் மற்றும் நிர்வாகக் குழு கூட்டங்கள் பல்கலைக்கழக வளாகத்துக்குள் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும். இந்த குழுக்களின் உறுப்பினர்கள் தங்களுடைய கருத்துகளையும், அனுபவங்களையும் சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் பகிர வேண்டும். பெரும்பாலான மாநில பல்கலைக்கழகங்களில் வழக்கமான பதிவாளர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர்கள் இல்லாமல் இருக்கின்றன. அந்த பணியிடங்களுக்கு தற்காலிக பொறுப் பாளர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். சில பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள் இல்லாமல் இருப்பதால், அதன் செயல்பாடு பாதிக்கப்பட்டு இருக்கிறது. துணைவேந்தர் தேர்வு செயல் முறை பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) விதிமுறைகளுடன் இருக்கவேண்டும். பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்புகளை உறுதி செய்வதற்காக தொழில் முனைவோர் பற்றிய நடைமுறை நுண்ணறிவுகளுடன் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களை ஈடுபடுத்தி மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்